நம்பிக்கை இல்லா தீர்மானம்: மத்திய அரசை ஆதரிக்க திமுக முடிவு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாதீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக திமுக அறிவித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்க அதிமுகவின் ஆதரவையும் பா.ஜ.க. கோரியதால் கோபமடைந்த திமுக தனதுநிலையை அறிவிக்காமல் இருந்தது.

இது தொடர்பாக நேற்று தஞ்சையில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லையாஎன்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார்.

இந் நிலையில் நேற்று பிரதமர் கூட்டிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க திமுகஅமைச்சர் டி.ஆர். பாலு, அதிமுக ஆதரவைக் கோரியதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இக் கூட்டம் முடிந்த பின் உடனே அவர் தமிழகம் விரைந்தார். கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம்டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களின் மன நிலையை விளக்கினார்.

இதையடுத்து இன்று திருச்சியில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை எதிர்க்க முடிவு செய்துள்ளோம். திமுகவின்நாடாளுமன்றக் குழுத் தலைவர் மற்றும் மத்திய திமுக அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனையின் பேரில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது என்றார்.

திமுக வெளியேறினால் அந்த இடத்தை அதிமுக அடுத்த நிமிடமே நிரப்பி விடும் என்பதால் அதற்கு இடம் தராமல்இருக்கவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கவும், மத்திய அரசை ஆதரிக்கவும் திமுக முடிவுசெய்துள்ளது.

முன்னதாக கருணாநிதியுடன் பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள்தொலைபேசியில் பேசியதாகவும் தெரிகிறது. அப்போது கருணாநிதி மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ளஎஸ்மா வழக்கில் மத்திய அரசு தலையிடும் என நாயுடு உறுதியளித்தார்.

நிலைமை இப்படி இருக்க பா.ஜ.கவுடன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் நெருங்கி வரும் அதிமுக, நாளைமறுதினம் நடக்கவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் நிச்சயம் பங்கேற்று அரசுக்குஆதரவாக வாக்களிக்கும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக ஜெயலலிதாவுடன் பா.ஜ.க. தலைவர்கள் பேசி வருவதாக அரசியல் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

அதிமுக ஆட்சியை அகற்ற கோரிக்கை:

முன்னதாக நேற்றிரவு தஞ்சாவூரில் கொட்டும் மழையில் நடந்த திமுக தேர்தல் நிதியளிப்புப் பொதுக் கூட்டத்தில்பேசிய கருணாநிதி,

ஆணவ, அக்கிரம, அகம்பாவம் பிடித்த அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைவரும்ஒன்று திரண்டு வருகிற தேர்தலில் இந்த ஆட்சியை அகற்ற வாக்களிக்க வேண்டும்.

வறண்டு போய்க் கிடக்கும் தஞ்சை, திருவாரூர் மற்றும் நிாகை மாவட்டத்தில் திமுக தேர்தல் நிதியாக ரூ. 2கோடிக்கும் மேல் கொடுக்கப்பட்டிருப்பது, இந்த ஆட்சியை விரைவாக அகற்றுங்கள் என்று எங்களை மக்கள்கேட்டுக் கொள்வது போல உள்ளது என்றார்.

கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகியவற்றின் சார்பில் ரூ. 2.13 கோடிதேர்தல் நிதியாக கருணாநிதியிடம் வழங்கப்பட்டது. இன்று திருச்சியில் நடக்கும் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில்கலந்து கொள்கிறார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+