வைகோ மீதான பொடா வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது
சென்னை:
வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோ மற்றும் 8 மதிமுக நிர்வாகிகளை போலீஸார் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைகளில்அடைத்துள்ளனர். இவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
0இந்த வழக்கில் நேற்று முதல் விசாரணை தொடங்கியது. முதலில் சாட்சிகளின் சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளன. விசாரணை தொடங்குவதையொட்டி வைகோ உள்ளிட்ட 8 மதிகவினர் நீதிமன்றத்தில்ஆஜராயினர். செவந்தியப்பன் என்பவர் மட்டும் உடல் நிலக்குறைவு காரணமாக வரவில்லை.
செவந்தியப்பன் இல்லாத நிலையில் விசாரணையை மேற்கொள்ளக் கூடாது என்று அவரது வக்கீல் கோக்கைவிடுத்தார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத போதிலும் கூட, அவரது வக்கீல் இருப்பதால் விசாரணையைத்தள்ளி வைக்கத் தேவையில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இது தொடர்பாக அரசு வழக்கறிஞருக்கும் செவந்தியப்பனின் வழக்கறிஞருக்கும் இடையே நீண்ட விவாதம்நடந்தது. அதன் பின்னர் சாட்சியங்களிடம் விசாரணை தொடங்கியது.
முதலில் மதுரை திருமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கவேல் சாட்சியம் அளித்தார். அப்போது,திருமங்கலத்தில் வைகோ உள்ளிட்டவர்கள் பேசிய பொதுக்கூட்டம் நடந்த தேதி குறித்து அவர் தெரிவித்தபோது,மதிமுகவினரின் வழக்கறிஞர்களுக்கும், அரசுத் தரப்பு வக்கீலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சாட்சி தவறான தேதியைச் சொல்வதாக மதிமுகவினரின் வழக்கறிருஞர்கள் வாதிட்டனர்.
பின்னர் தொடர்ந்து சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25ம் தேதிக்குஒத்திவைப்பதாக நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications