பசு வதை தடுப்பு சட்டத்தை ஏற்கவே மாட்டோம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

பசு வதைத் தடைச் சட்டத்தை எந்தக் காரணம் கொண்டும் ஆதரிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

திமுகவுக்கு தேர்தல் நிதி திரட்டும் பயணத்தின் இன்னொரு கட்டமாக திமுக தலைவர் கருணாநிதி இன்று காலைதிருநெல்வேலி சென்றார். இன்று மாலை நடக்கும் பொதுக் கூட்டத்தின்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டதேர்தல் நிதி அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று காலை நெல்லை வந்த கருணாநிதி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,

பசு வதைத் தடுப்புச் சட்டத்தை ஆரம்பத்திலிருந்தே நாங்கள் எதிர்த்து வருகிறோம். இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டால்,15 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள், ரூ. 3,000 கோடிக்கு அன்னிய செலாவணி இழப்புஏற்படும்.

தேசிய ஜனநிநயகக் கூட்டணியின் பொது செயல் திட்டத்தில் இல்லாத இதுபோன்ற திட்டங்களை திணிக்கமுயற்சித்தால் திமுக அதை ஏற்றுக் கொள்ளாது. இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால்அதை எதிர்ப்போம்.

தமிழக அரசியலில் அணி மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து இப்போது கூற முடியாது. காலம் வரும்போதுபார்க்கலாம் என்றார்.

-திமுக சார்பில் தேர்தல் நிதி சேரிகப்பு தமிழகம் முழுவதிலும் தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொருமாவட்டத்திற்கும் நேரடியாக சென்று தேர்தல் நிதியை திமுக தலைவர் கருணாநிதி பெற்று வருகிறார்நெல்லை மாவட்ட தேர்தல் நிதி இலக்காக ரூ. 1 கோடியை கருணாநிதி நிர்ணயித்துள்ளார். ஆனால், அதைவிடஅதிகமாகவே நிதி தரப்படும் என மாவட்ட திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+