திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரெய்ட்: 16 ஊழியர்கள் ஒட்டுமொத்த சஸ்பெண்ட்- அலுவலகம் மூடல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வந்த 16 ஊழியர்கள், ஊழல் மற்றும் முறைகேடுகாரணமாக ஒட்டு மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அலுவலகம் பணிகள் ஏதும்நடக்காமல் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசாரும், விஜிலென்ஸ்பிரிவினரும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கையில் இருந்த லஞ்சப் பணத்தை ஊழியர்கள் ஜன்னல்கள்வழியாக வெளியே எறிந்தனர்.

பலர் கிழித்து குப்பை தொட்டிகளில் வீசினர். பல புரோக்கர்கள் ஒட்டு மொத்தமாக கைது செய்யப்பட்டனர்.ஆனால், ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந் நிலையில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி ரெய்ட் நடந்தது.அங்கு உயர் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி கணக்குகளை சரி பார்த்தபோது அங்கு ரூ. 8 லட்சம் அளவுக்குஊழல் பணம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு பணியாற்றி வந்த 16 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒட்டு மொத்தமாக 16 பேர்சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், அலுவலகத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை.

ஓட்டுனர் உரிமம் வழங்குதல்- புதுப்பித்தல், வாகனங்களைப் பதிவு செய்தல், வரி கட்டுதல் போன்ற எந்தப்பணியும் நடக்கவில்லை. அலுவலகம் பூட்டப்பட்டுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+