வைகோ ஒரு புரட்சித் தலைவர்: பெர்னாண்டஸ்
வேலூர்:
இத்தனை காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் சற்றும் கலங்காமல் எப்போதும போல உறுதியுடன்உள்ளார் வைகோ. உண்மையில் அவர் ஒரு புரட்சித் தலைவர் தான் என பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் கூறினார்.
ஏற்காட்டில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பெர்னாண்டஸ் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வந்தார்.வேலூர் பெண்கள் சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
அங்கிருந்து மத்திய சிறைக்குச் சென்ற பெர்னாண்டஸ் அங்கு அடைக்கப்பட்டுள்ள வைகோவை பார்த்து பேசினார்.பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வைகோவைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் அவரை சந்திக்க வந்தேன். அவர் நலமாக உள்ளார்,நார்மலாக உள்ளார், எப்போதும் போல கலகலப்பாக, சுறுசுறுப்பாக உள்ளார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் கூட சற்றும் கலங்கவில்லை அவர். அவர் ஒருபுரட்சிவாதி, புரட்சித் தலைவர்.
பொடா சட்டம் தேவை என்றுதான் அதைக் கொண்டு வந்தோம். இப்போது அதை வாபஸ் பெறுவது சரியாகஇருக்காது. இருப்பினும் குறைபாடுகளைக் களையவே பொடா மறு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுகொஞ்சம் ஸ்லோ மோஷனில் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
இந்தக் குழுவிடம் எந்த விவரத்தையும் தர முடியாது என தமிழக அரசு கூறிவிட்டது. அது அவர்கள் இஷ்டம்என்றார்.
பின்னர் சென்னை சென்ற பெர்னாண்டஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்தியஅமைச்சர் முரசொலி மாறனைப் பார்த்தார். இதையடுத்து மருத்துவமனையிலேயே திமுக தலைவர்கருணாநிதியையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
முன்னதாக ஏற்காட்டில் உள்ள மாண்ட்போர்ட் பள்ளி விழாவைத் தொடங்கி வைத்த பெர்னாண்டஸ் நிருபர்களிடம்பேசுகையில்,
காஷ்மீல் நிலைமை இப்போது பரவாயில்லை. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ராணுவத்தினர் மிகத் தீவிரமாகஇறங்கியுள்ளனர். இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
விரைவில் காஷ்மீர் பண்டிட்டுக்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பும் சூழல் ஏற்படும். மாநில அரசு,பாதுகாப்புப் படைகளுடன் நல்ல ஒத்துழைப்பு தந்து வருகிறது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர்மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அம் மாநில அரசு செய்து வருகிறது.
தமிழகத்தில், திமு மற்றும் பா.ஜ.க. உறவு சீராகவே உள்ளது. இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்பெர்னாண்டஸ்.
இலாகா இல்லாத அமைச்சராக மாறன் தொடர்ந்து இருப்பதால் அவரது மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்குமாஎன்று கேட்டபோது, மாறன் மத்திய அமைச்சரவையில் ஒரு முக்கிய அமைச்சர். அவருக்கு செலவு செய்யவேண்டியது எங்களது கடமை என்றார்.
சமீப காலமாக சென்னை வந்தும் கூட கருணாநிதியை சந்திப்பதை பெர்னாண்டஸ் தவிர்த்து வந்தார். நீண்டகாலத்துக்குப் பின் இப்போது தான் இருவரின் சந்திப்பும் நடந்துள்ளது.
தனது கட்சியைச் சேர்ந்த ஜெயா ஜேட்லிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கேட்டார் பெர்னாண்டஸ். அதை பா.ஜ.க. ஏற்கமறுத்துவிட்டது. இதனால், பா.ஜ.க. மீது கோபத்தில் உள்ளார் பெர்னாண்டஸ். இந் நிலையில் தான் பா.ஜ.கவுடன்உரசலில் உள்ள கருணாநிதி, வைகோஆகியோரை சந்தித்துவிட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications