கெளரவ ரேசன் கார்டு: "எச்" முத்திரை குத்த மேலும் 1 மாதம் அவகாசம் !
சென்னை:
மாத வருவாய் ரூ. 5,000க்கு மேல் உள்ளவர்கள், தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டுகளாகமாற்றிக் கொள்வதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாத வருவாய் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்கள், வருமான வரி கட்டுவோர் ஆகியோர் தங்களது ரேஷன்கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்களது ரேஷன் கார்டுகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்து அதில் எச்முத்திரை குத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான மக்கள் தங்கள்கார்டுகளில் எச் முத்திரை குத்திக் கொள்ளத் தயாராக இல்லை.
இதையடுத்து ரேசன் கார்டுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மிரட்டல் கொடுக்கப்பட்டது. ஆனாலும்மக்களிடையே அரசின் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தான் நிலவி வருகிறது.
இந்தக் கெடு முடிவடைய 2 நாட்களே பாக்கி இருந்த நிலையில் தற்போது காலக் கெடுவை அரசு நீட்டித்துள்ளது.
இன்னும் ஏராளமான பொதுமக்கள் தங்களது கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளவேண்டியுள்ளதால், அக்டோபர் மாத இறுதி வரை காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications