கண்ணப்பன் கைதை பிரதமர் தடுக்க வேண்டும்: கருணாநிதி
சென்னை:
திமுக தலைவர்கள் மற்றும் முன்னோடிகளின் குடும்பத்தினர் குறித்து அமைச்சர்கள் ஆபாசமாக பேசுகிறார்கள்.அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக பேச்சாளர்கள் மீது மட்டும் போலீஸார் பாரபட்சமானநடவடிக்கை எடுத்து வருவதாக கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் சென்னையில் இன்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதியின்தலைமையில் நடக்கிறது. காலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் கருணாநிதிபேசுகையில்,
அதிமுக பொதுக் கூட்டங்களில் பேசும் அமைச்சர்கள், அதிமுக எம்.பிக்கள் போன்றோர், திமுக தலைவர்களின்குடும்பத்தினர் குறித்தும், முன்னோடித் தலைவர்களின் குடும்பத்தினர் குறித்தும் மிக ஆபாசமாக பேசி வருகிறார்கள்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸார் கவலையே படுவதில்லை. கண்டு கொள்ளவதும் இல்லை.அதே நேரம் திமுக பேச்சாளர்கள் மீது மட்டும் பொய் வழக்கு போடுவதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
தமிழகத்தில் திமுக, பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டதற்கு காரணம் திமுக அல்ல, பா.ஜ.க.தான். பா.ஜ.க.தலைவர்கள் சிலரின் பேச்சுக்கள்தான் கூட்டணி முறிவுக்குக் காரணமாயிற்று.
பொடாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிராக டிசம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்திற்குஇப்போதிலிருந்தே திமுகவினர் தயாராக வேண்டும். இது பா.ஜ.கவுக்கு எச்சரிக்கை விடுக்கும் போராட்டம் அல்ல.இது எங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் போராட்டம். இதை பா.ஜ.க. எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி.
மத்திய அமைச்சர் கண்ணப்பனை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய ஜெயலலிதா அரசு துடிக்கிறது. இதைபிரதமர் வாஜ்பாய் அனுமதிக்கக் கூடாது. தடுத்து நிறுத்த வேண்டும்.
பொடா சட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என பா.ஜ.க. தலைவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதைக்கேட்டுக் கொண்டிருக்க நாங்களும் தயாராக இல்லை.
காங்கிரஸ்-திமுக இடையே உறவு ஏதும் ஏற்படவில்லை. உறவு ஏற்பட்டால் சொல்கிறேன்.
இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கருணாநிதிதெரிவித்துள்ளார்.
பத்திரிக்கைகளுக்கு டோஸ்:
முன்னதாக திமுகவின் முப்பெரும் விழா நேற்றிரவு நடந்தது. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை வழங்கியபின் கூட்டத்தில் பேசிய கருணாநிதி,
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் சென்னை வருகை குறித்து பத்திரிக்கைகளில் பெரியஅளவில் செய்தி வெளியிடப்படாதது வருத்தம் தருகிறது. அவர் தலித் என்ற காரணத்தால்தான் அவருக்குமுக்கியத்துவம் தரப்படவில்லை என்று கருதுகிறேன்.
அதேபோல, விழுப்புரம் திமுக மாநாடு குறித்தும் பத்திரிக்கைகள் சரியான முறையில் செய்திவெளியிடப்படவில்லை.
செய்திகளை, நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே மக்களுக்குத் தர வேண்டியது பத்திரிகைகளின் கடமை. ஆனால்செய்திகளை திரித்தோ, குறைத்தோ கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் பத்திரிக்கைகளுடன்சண்டை போட நான் தயாராக இல்லை என்றார் கருணாநிதி.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications