நக்சலைட்டுகளை ஒழிக்க ரூ. 2000 கோடியில் திட்டம் !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்சலைட்டுகளை ஒழித்துக் கட்ட ரூ. 2,000 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய உள்துறைஇணையமைச்சர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.
சென்னை வந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில்,நக்சலைட் ஒழிப்புக்கு மத்திய அரசு ரூ. 1,000 கோடி ஒதுக்க உள்ளது. அதேபோல சம்பந்தப்பட்ட மாநிலங்களும் ரூ.1,000 கோடியை ஒதுக்கும்.
ரூ. 2000 கோடியில் காவல்துறை நவீனமயமாக்கம், உளவுத்துறை வலுவாக்குதல் ஆகிய பணிகள்மேற்கொள்ளப்படும்.
மத்திய படைகளின் உதவி தேவைப்பட்டால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிச்சயம் உதவும்.
ஏற்கனவே, தீவிரவாத ஒழிப்புக்காக வருடத்திற்கு ரூ. 200 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் சிலமாநில அரசுகள் அதை சரிவர பயன்படுத்தவில்லை என்றார் ராவ்.












Click it and Unblock the Notifications