இன்று நாகப்பட்டிணம் செல்கிறார் ஜெ: காத்திருக்கின்றன கறுப்புக் கொடிகள்
சென்னை:
காவிரியில் மிகத் தாமதமாக நீர் திறந்துவிடப்பட்டாலும், போதிய நீர் வராமல் விவசாயிகள் கடும்எரிச்சலடைந்துள்ளனர்.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று நாகப்பட்டனம் செல்கிறார். அங்கு ரூ. 260 கோடி மதிப்புள்ள நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக நாகப்பட்டனம் வருகிறார் ஜெயலலிதா. பிற்பகல் 2 மணிக்கு தனிவிமானம் மூலம் திருச்சி செல்லும் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகை செல்கிறார்.
நாகப்பட்டிணம் ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். நலிந்தோருக்கு அரசு உதவிகளையும் அவர் வழங்குகிறார். நிகழ்ச்சிக்குசபாநிாயகர் காளித்து தலைமை வகிக்கிறார்.
கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற ஜெயலலிதா முயற்சிக்கவில்லை என்று கூறி வரும் காவிரி டெல்டாபகுதி விவசாயிகள், இலவச மின்சாரத்தையும் தமிழக அரசு ரத்து செய்து விட்டதால் கொந்தளித்துப் போயுள்ளனர்.
இந் நிலையில் முதல்வரின் பயணத்தை கருத்தில் கொண்டு கடந்த வாரம் தான் மேட்டூர் அணையில் இருந்துகாவிரியில் நீரைத் திறந்துவிட்டது அரசு. தண்ணீர் விட்டதால் மகிழ்ச்சியில் இருந்தாலும், வரும் நீர் போதுமானதாகஇல்லை என்ற கடுப்பில் உள்ளனர் விவசாயிகள்.
இதனால் நாகை வரும் ஜெயலலிதாவுக்கு வீதிகள் தோறும் கருப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவித்துள்ளனர்.இந்த போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த பரபரப்பான சூழலில் ஜெயலலிதா நாகை செல்வதால் அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications