இந்து- முரசொலி வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்சுக்கு மாற்றம்
டெல்லி:
தமிழக சட்டமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்து இந்து மற்றும் முரசொலி நாளிதழ்களின்பத்திரிக்கையாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்டபெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தின் அதிகார வரம்புகள் குறித்தும், எழுத்துரிமை குறித்தும் இந்துவும் முரசொலியும் கேள்விகள்எழுப்பியுள்ளதால், அரசியல் சட்டரீதியிலான சிக்கல்கள் நிறைந்த இந்த வழக்கை அரசியல் சட்ட பெஞ்சுக்குமாற்றுவதாக இதுவரை வழக்கை விசாரித்து வந்த 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று அறிவித்தது.
சட்டசபையை அவமதிப்பு செய்யும் வகையில் செய்தி வெளியிட்டதாக, இந்து பத்திரிக்கை ஆசிரியர் ரவி,எக்சிகியூடிவ் எடிட்டர் மாலினி பார்த்தசாரதி, பதிப்பாளர் ரங்கராஜன், செய்திப் பிரிவு தலைமை நிருபர் ஜெயந்த்,சிறப்பு நிருபர் ராதா வெங்கடேசன், முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோருக்கு 15 நாள் சிறைத் தண்டனையைதமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து விதித்தார்.
அதை எதிர்த்து பத்திரிக்கையாளர்கள் 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்தநீதிபதிகள் சபர்வால் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா அடங்கிய சட்ட பெஞ்ச் கைதுக்குத் இடைக்காலத் தடை விதித்து உத்தரவுபிறப்பித்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்விஸ்வநாத் ஐயர், சட்டசபையின் மாண்பையும் அதிகாரத்தையும் ஒத்துக் கொள்வதாக இந்து, முரசொலிபத்திரிக்கையாளர்கள் அறிவித்தால் கூட போதும், அவர்கள் இது தொடர்பாக மன்னிப்பு கூட கேட்கவேண்டியதில்லை. வழக்கை இத்தோடு விட்டு விடத் தயார் என்றார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இதை நீங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி முடிவெடுங்கள். இந்த வழக்கில்எழுப்பப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்.
சட்டசபையின் அதிகார வரம்புகள் குறித்தும், பேச்சு சுதந்திரம், பத்திரிக்கைச் சுதந்திரம் தொடர்பாக இந்தியஅரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் குறித்தும் இந்த மனுக்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு சட்டம் குறித்த இத்தகைய முக்கியமான மனு மீதான விசாரணையை 5 நபர்கள் கொண்ட அரசியல்சட்ட பெஞ்ச் விசாரிப்பதே சிறந்தது.
எனவே அத்தகைய பெஞ்ச் அமைத்து, இந்த மனு மீதான விசாரணையை தொடர நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.விசாரணை முடியும்வரை பத்திரிக்கையாளர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு விதித்த தடையை நீட்டிக்கிறோம்என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
முன்னதாக தங்களையும் இந்த வழக்கில் மனுதாரர்களாக சேர்த்துக் கொள்ளக் கோரி பத்திரிக்கையாளர் குல்தீப்நய்யர் மற்றும் இந்திய பத்திரிக்கையாளர் கவுன்சில் சார்பில் கொடுக்கப்பட்டிருந்த மனுக்களையும் நீதிபதிகள்ஏற்றுக்கொண்டனர்.
பொதுவாக மிகவும் சிக்கலான வழக்குகள் விசாரணையின்போது மட்டும் 5 நபர் அரசியல் சட்ட பெஞ்ச்அமைக்கப்படும். தற்போது 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளதன் மூலம்இந்த வழக்கின் மீதான பரபரப்பு மேலும் அதிகமாகிவிட்டது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications