அந்தமான் கப்பல் கொலை: சமையல்காரர் கைது
சென்னை:
நடுக்கடலில் இஸ்ரேலிய வாலிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளி பிடிபட்டார். கப்பலின்சமையல் கூடத்தில் வேலை பார்த்து வந்தவர்தான் இந்தக் கொலையைச் செய்தவர் என்று தெரியவந்துள்ளது.
அந்தமானிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த பயணிகள் கப்பலில் காதலியுடன் உறங்கிக் கொண்டிருந்தஇஸ்ரேலிய வாலிபர் கோகன் கோயல் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னை போலீஸார்விசாரணை நடத்தினர்.
கொலையாளியின் முதுகுப்புறத்தைப் பார்த்ததாக கொலை செய்யப்பட்டவரின் காதலி எலிசபெத் கூறியதையடுத்துகப்பலில் பயணம் செய்தவர்களை நடக்க வைத்து அதைப் பின்புறத்தில் இருந்து போலீஸார் வீடியோ படம்எடுத்தனர். அந்தப் படங்களை எலிசபெத்திடம் போட்டுக் காட்டியபோது அவர் கொலையாளியை அடையாளம்காட்டினார்.
அந்த நபரிடம் போலீஸார் விசாரணை செய்தபோது கொலையைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டார். அவர்பெயர் ராஜேஸ்பால் (26). அந்தமானைச் சேர்ந்த அவர் கப்பலில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார்.கொலைக்கான காரணமாக அவர் கூறியதாவது:
கப்பலில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்ட இடத்தில் கோகன் கோயல் சிகரெட் பிடித்தார். அதை நான்தடுத்தபோது, அவர் என்னை அடித்துவிட்டார். அந்தக் கோபத்தில்தான் அவரைக் கத்தியால் கழுத்தில் குத்திவிட்டுஓடிவிட்டேன் என்றார். கொலையாளி பிடிபட்டதையடுத்து விசாரணைக்காக காத்திருந்த மற்ற 14 வெளிநாட்டுப்பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் இந்தக் கொலை செய்தியை இஸ்ரேல் நாட்டுப் பத்திரிக்கைகள் முக்கியத்துவம் கொடுத்துபரபரப்பாக வெளியிட்டுள்ளன. இதனையடுத்து இஸ்ரேல் அரசு இந்திய அரசிடம் கொலை விவரம் குறித்துதெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதுரகத்தில் இது பற்றியவிவரமான அறிக்கையை தமிழக போலீசார் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த கொலை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், இது தொடர்பாக நடந்த விசாரணைகள்,பிரேதப் பரிசோதனை என அனைத்தையும் சென்னை போலீஸார் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.
கோகன் கோயலின் உடலை சென்னை வந்து பெற்றுக் கொள்ள அவரின் உறவினர்கள் முன் வராத நிலையில்,இஸ்ரேலிய தூதரகம் மூலம் அவரது உடலை இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பி வைக்க போலீஸார் முடிவு செய்தனர்.இதனையடுத்து கோகனின் உடல் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காதலி எலிசபெத்தும் உடன்சென்றுள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications