பொடா வழக்கில் ஜாமீன் கோர வைகோ மறுப்பு
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோஜாமீன் கோர மாட்டார் என்று அக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமானசெஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
பொடா சட்டத்தில் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை சாதாரண வழக்கில் கைதானவர்களைப்போல் நடத்தலாம் என்றும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்துதமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சிறையில் 500 நாட்களைக் கடந்துவிட்ட வைகோவும் ஜாமீன் மனு தாக்கல் செய்தால் அவருக்கும்ஜாமீன் கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கை நான் சந்திப்பேன், ஜாமீன் கோர மாட்டேன் என்று வைகோ கூறிவருகிறார்.
நெடுமாறனுக்கு ஜாமீன் கிடைத்தவுடன் வேலூர் சென்ற மதிமுக மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், மத்தியசிறையில் வைகோவை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இச் சந்திப்பு நடந்தது.
இதையடுத்து வெளியில் வந்த செஞ்சி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வைகோவும், பொடாசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மற்ற மதிமுகவினரும் ஒருபோதும் ஜாமீன் கோர மாட்டார்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. வைகோவுக்கும், மதிமுகவுக்கும் கிடைத்த வெற்றி இது. பேச்சுசுதந்திரத்தை வலியுறுத்தி வரும் மதிமுகவின் நிலையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிலை நிறுத்தியுள்ளது என்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக விலகினால் மதிமுகவும் விலகுமா என்று கேட்டபோது, இது யூகத்தின்அடிப்படையிலான கேள்வி, இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications