மது கடைகள், மணல் குவாரிகள் மீதான வழக்குகளில் நாளை தீர்ப்பு
சென்னை:
மதுக் கடைகள், மணல் குவாரிகளை அரசே கையகப்படுத்தியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்புவழங்கப்படவுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தனியார் மணல் குவாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது.அரசே இனிமேல் மணல் அள்ளும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மணல் குவாரி உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அரசு உத்தரவுக்குத் தடை விதித்து நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டார். ஆனால் அரசுஉடனடியாகத் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதம் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதேபோல, தனியார் மதுக் கடைகளை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து மதுக் கடை உரிமையாளர்கள் சார்பில்உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கிலும் விசாரணை முடிவடைந்த நிலையில் தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப் பிரகாசம் ஆகியோர் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளனர். தற்போதுநீதிபதிகளின் உத்தரவுப்படி 879 தனியார் கடைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications