மதுரை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் அடிதடி!!
மதுரை:
மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் கூறிய அதிமுக கவுன்சிலரை பிற அதிமுககவுன்சிலர்கள் அடித்து, உதைத்தனர். மிதித்து அவரை துவம்சம் செய்தனர். இதனால் மாநகராட்சிக் கூட்டம்ரணகளமானது.
திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏவான சீனிவேலுவுக்கும், மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் போஸ்என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன் தகராறு உண்டு.
இந் நிலையில் சீனிவேலுவும் அவரது ஆட்களும் தன்னைக் கொலை செய்து விடுவதாக காவல் நிலையத்தில்வைத்தே மிரட்டுவதாக மாநகராட்சி மேயர் செ.ராமச்சந்திரனிடம் போஸ் சில நாட்களுக்கு முன் புகார் கொடுத்தார்.
இதை மாநகராட்சிக் கூட்டத்தில் தெரிவிக்குமாறு மேயர் ராமச்சந்திரன் (இவர் திமுககாரர்) அவரைஅறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி மன்றக் கூட்டம் தொடங்கியவுடன் போஸ் எழுந்து சீனிவேலுவால்எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, இதனால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க மேயர் உத்தரவிட வேண்டும்என்று கூறினார்.
இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் ஜெயபால், சுப்பு, ஜெயவேல், முருகேசன் உள்ளிட்டோர் ஆவேசமடைந்து,போஸைத் தாக்கினர். அடித்து, உருட்டி, உதைத்தனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவத்தால் மற்ற கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து வெளியே ஓடினர்.அடிதடி, ரகளை அதிகமானதையடுத்து மன்றக் கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு மேயர் ராமச்சந்திரனும்வெளியேறினார்.
போஸை அதிமுக கவுன்சிலர்கள் தாக்கியது தவறு. இதற்கு அவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்,இல்லாவிட்டால் காவல் துறையிடம் புகார் கொடுக்கப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் கூறினார்.
ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என அதிமுக கவுன்சிலர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து தாக்கப்பட்டபோஸை அழைத்துக் கொண்டு மேயர் ராமச்சந்திரன் துணை போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் சென்றார். அங்குஅதிமுக கவுன்சிலர்களுக்கு எதிராக போஸ் புகார் கொடுத்தார். தனக்கும் பாதுகாப்பு கோரினார்.
இதற்கிடையே தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர்களும் போலீசில் ஒரு புகார் கொடுத்தனர். அதில், போஸ்மற்றும் திமுக கவுன்சிலர்கள் சிலர் சேர்ந்து தங்களைத் தாக்கியதாக அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications