காங்கிரஸுக்கு பாண்டி. கிடையாது: கருணாநிதி உறுதி
சென்னை:
பா.ம.கவுக்கு கொடுத்த பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்குத் தர முடியாது என்று திமுகதலைவர் கருணாநிதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு நேற்று வந்த காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மன்மோகன் சிங், கமல்நாத் ஆகியோர் திமுக தலைவர்கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
அவர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், பாண்டிச்சேரியைபா.ம.கவுக்கு கொடுத்தாகி விட்டது. இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவேஅதை வேறு கட்சிக்கு கொடுக்க இயலாது. மேலும், பா.ம.கவுக்கு பாண்டிச்சேரி என்பது காங்கிரஸுடன் திமுகவுக்குஉறவு ஏற்படுவதற்கு முன்பே ஏற்பட்ட ஒப்பந்தம்.
மன்மோகன் சிங்கும், கமல்நாத்தும் என்னிடம் பேசுகையில் பாண்டிச்சேரி தொடர்பாக பெரிய அளவில்கோரிக்கை வைக்கவில்லை. மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் போட்டியிடும்தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக ஏற்கனவே முடிவு எடுத்து விட்டார்.
இரு கட்சிகளின் தேர்தல் குழுக்களும் கூடி விவாதித்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்துபேசி முடிவு செய்யும். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும்.இல்லாவிட்டால் குழப்பமாகி விடும் என்றார் கருணாநிதி.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications