தமிழக வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி இல்லை: மறுக்கிறார் சாரங்கி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் குளறுபடி நடந்துள்ளதாக மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகே.ஜே.ராவ் கூறியுள்ள நிலையில் அதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான மிருத்யுஞ்சய் சாரங்கிமறுத்துள்ளார்.

தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குதிமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் அனுப்பின.இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகள்,மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய தொகுதிகளில் வாக்காளர் பட்டியலைமறு ஆய்வு செய்ய ஆணையம் உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக தேர்தல் ஆணைய அதிகாரி கே.ஜே.ராவ் சென்னை வந்து தலைமைத் தேர்தல் அதிகாரிசாரங்கியுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் மதுரை சென்ற அவர் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்டபல்வேறு பகுதிகளுக்கும் சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது வாக்காளர் பட்டியலில் ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதையடுத்து 23,000 போலி வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதையடுத்து 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யவும் ராவ் உத்தரவிட்டார்.

தமிழக வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் குளறுபடி நடந்துள்ளதாகவும் ராவ் தெரிவித்ததாக செய்திகள்வெளியாயின. ஆனால் இதை சாரங்கி மறுத்துள்ளார்.

சென்னையில் தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள்) கூட்டம்தலைமைச் செயலக மாநாட்டு அரங்கில் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பிறகு சாரங்கி செய்தியாளர்களிடம்பேசுகையில்,

வாக்காளர் பட்டியலில் பெரிய குளறுபடி நடந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரி ராவ் தெரிவிக்கவில்லை. மதுரைமாவட்டத்தில் உள்ளசில பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் சிறு சிறு மாற்றங்களை மட்டுமே பரிந்துரைத்துள்ளார்.

பிப்ரவரி 25ம் தேதி திட்டமிட்டபடி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நாடாளுமன்றத் தேர்தலுடன்சேர்த்து திருமாவளவன் ராஜினாமா செய்த மங்களூர் (தனி) சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தலை நடத்ததேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தாலும் கூட வாக்களிக்கஅனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார் சாரங்கி. இந்தக் கூட்டத்தில் அதிகாரி ராவும் கலந்து கொண்டாலும் அவர்நிருபர்களிடம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+