மங்களூர் தனி தொகுதியில் திமுக போட்டி
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் ராஜினாமா செய்ததால் மங்களூர்சட்டசபை தொகுதிக்கு நடக்கும் இடைத் தேர்தலில் திமுக போட்டியிடுகிறது. இதை ஜனநாயக முற்போக்குக்கூட்டணிக் கட்சிகள் ஒப்புக் கொண்டுள்ளன.
திமுக தலைமைலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம்சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
இதில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப்பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தமிழகக் காங்கிரஸ்முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர்மொய்தீன் உள்ளிட்ட அனைத்து கூட்டணித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் தேர்தல் உத்திகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது மங்களூர் (தனி) தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
கடந்த தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு அங்கு திருமாவளவன் வெற்றி பெற்றார். திமுகவுடனான கருத்துவேறுபாடு காரணமாக தனது பதவியை அவர் உதறியதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
