ஷேக்ஸ்பியர் பிறந்த நாளில் வேட்பு மனு: இது அய்யர் ஸ்டைல்!
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் மணிசங்கர அய்யர், தனக்குப் பிடித்தஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளன்று வேட்பு மனுதாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் என்றாலும் வட இந்தியாவிலேயே பல காலம் வசித்தவர் மணிசங்கர அய்யர். 1980ம்ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழகத்திற்கே திரும்பி வந்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். தமிழை விட ஆங்கிலத்தில் நல்ல புலமை உள்ளவர். தமிழ் இலக்கியங்களைவிட ஆங்கில இலக்கியங்கள் இவருக்கு அத்துப்படி. குறிப்பாக ஷேக்ஸ்பியர் என்றால் உயிர். அவர் மீது அதீத அபிமானம்வைத்துள்ளவர்.
அப்படிப்பட்ட அய்யர் தனது வேட்பு மனுத் தாக்கலை ஏப்ரல் 23ம் தேதி வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதுஷேக்ஸ்பியரின் பிறந்த தினம்












Click it and Unblock the Notifications