குடியாத்தம் அருகே கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ
சென்னை:
டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் குடியாத்தம் அருகே தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெண் காயமடைந்தார். இதனால் ஜோலார்பேட்டை-காட்பாடி வழித் தடத்தில் ரயில் போக்குவரத்து 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இன்று அதிகாலை 2.15 மணியளவில் கேரள எக்ஸ்பிரஸ் ரயிலின் பிரேக் வேன் பெட்டியில் (ரயிலுக்குத் தேவையான உபகரணங்கள் வைக்கப்படும் பெட்டி) தீப் பிடித்துக் கொண்டது. இந்தத் தீ அடுத்திருந்த பயணிகளின் பெட்டிக்கும் பரவியது.
இதைக் கண்டு, தூக்கக் கலக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு எழுந்தனர். அவரச சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் அவசரமாக ரயிலில் இருந்து வெளியேறினர்.
இந்த நெரிசலில் ஸ்ரீஜா (24) என்ற பெண் காயமடைந்தார். அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்ததும் காட்பாடி, வேலூர், குடியாத்தத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. பல மணி நேரம் தாமதத்துக்குப் பின் காலை 6.30 மணிக்கு ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
இந்த விபத்தால், மிக அதிகமான ரயில் போக்குவரத்து நிறைந்த காட்பாடி-ஜோலார்பேட்டை வழித் தடத்தில் 4 மணி நேரம் பல ரயில்களும் நிறுத்தப்பட்டன.
சேரன் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 8 ரயில்கள் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தன.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications