தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை வீரர்கள்
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக பிடிபட்ட ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படைவீரர்கள் கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் பல்வேறு படகுகளில் மீன் பிடிக்கக் கிளம்பினர்.கச்சத்தீவு அருகே அவர்கள் இறால் மீன்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்களைப் பார்த்ததும் தமிழக மீனவர்கள்தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தமிழக மீனவர்களை இலங்கைவீரர்கள் மிரட்டியதால் தமிழக வீரர்கள் தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை.
பின்னர் தமிழக மீனவர்களின் படகுகளுக்கு வந்து அவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர் இலங்கை வீரர்கள்.பின்னர் தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை எடுத்துச் சென்றனர், வலைகளையும் அறுத்தெறிந்தனர்.
இனிமேல் இலங்கை கடற்பகுதிக்குள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை வீரர்கள்எச்சரித்துச் சென்றனர். இந்தத் தாக்குதலில் 5 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் மாற்று நாட்டு கடல் பகுதிக்குள் வருவதில்லை எனஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் ராமேஸ்வரம் மீனவர்கள் நடந்துகொண்டதாக தமிழக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications