எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க மன்மோகன் வேண்டுகோள்
டெல்லி:
நாடாளுமன்றத்தில் தங்கு தடையின்றி விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றுபிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம்ஆற்றிய உரையில் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதுநடைபெற்ற விவாதத்தை எதிர்க்கட்சியினர் தடுத்தனர். இத்தகைய செயல்கள் கவலை தருகின்றன.
நாடாளுமன்றத்தில் தங்குதடையின்றி விவாதங்கள் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்கவேண்டும். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தைத் தொடரஎதிர்க்கட்சிகள் அனுமதித்திருந்தால் நாட்டு மக்கள் பயனடைந்திருப்பார்கள். குடியரசுத் தலைவரின் உரையில்இடம்பெற்றிருந்த அம்சங்களை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
அனைவருக்கும் பொது சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் ஆரம்பக் கல்வி, பெண்கள் கல்விக்குஊக்குவிப்பு, வசதியற்ற மாணவர்களுக்கு மதிய உணவு, மதநல்லிணக்கத்தைக் காப்பது, சிறுபான்மை இனமக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுத்தல், சமூக நீதியைப் பாதுகாப்பது, புதிய வேலைவாய்ப்புகளைஉருவாக்குவது,
குறைந்தபட்ச செயல்திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்துவது, வேளாண் துறையில் தனியார் மற்றும் அரசுமுதலீடுகளை அதிகரிப்பது ஆகியவை அரசின் செயல்திட்டமாக அமையும். அதிக பொருளாதார வளர்ச்சி,நகரமயமாக்கம், வேளாண் துறையில் நவீனமயம் ஆகிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றுகூறினார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications