கருணா: சந்திரிகாவுக்கு வைகோ கண்டனம்
சென்னை:
அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் விதமாக கருணாவுக்கு இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காஅடைக்கலம் கொடுத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பொடா சட்டத்தை வாபஸ் பெறுவது என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். அதற்கான நடைமுறைகள்நடந்து வருகின்றன. அமைச்சரவையில் சேர்வதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை.
சேது சமுத்திர திட்டத்தை விரைவுபடுத்தி, போதிய நிதியை ஒதுக்க வேண்டும். இந்தத் திட்டம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று தமிழக அரசு கருதுமேயானால் அதனை வெளிப்படையாக சொல்லட்டும்.
மூத்த தலைவரான வாஜ்பாயை பாஜகவினர் அவமானப்படுத்துவது வேதனையளிக்கிறது.
புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிய கருணாவுக்கு இலங்கை ராணுவம் ஆதரவளித்ததாக செய்திகள் வந்துள்ளன.அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைப்பதற்காக சந்திரிகா முயல்வதாக முன்பே கூறினேன். சந்திரிகாவின்சுயரூபம் இப்போது தெரிந்து விட்டது.
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவ வேண்டும். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்என்பது மதிமுகவின் கருத்து. அதற்காக தடையை நீக்க வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசை நிர்பந்திக்கமாட்டோம். வருங்காலத்தில் புலிகள் மீதான தடையை நீக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் பழைய விஷயங்களைநினைத்துக் கொண்டிருந்தால் பிரச்னையை தீர்க்க முடியாது என்றார்.
பாமக- நடிகர் விஜயகாந்த் மோதல் குறித்து நிருபர்கள் கேட்டபோது கருத்து தெரிவிக்க வைகோ மறுத்து விட்டார்.தேர்தலை சந்திக்காமல் அமைச்சராவது சரியா என்று கேட்கப்பட்டபோது, அவ்வாறு விதி இருக்கும்போதுஅமைச்சராக வருவதில் என்ன தவறு என்றார் வைகோ.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications