ரஜினி ஆதரவை பெற விஜயகாந்த் முடிவு
சென்னை:
பாமக எதிர்ப்பு விவகாரத்தில் ஏற்கனவே அனுபவம் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ஆதரவைப் பெற விஜயகாந்த்முடிவு செய்துள்ளார்.
பாமகவினரின் கடும் எதிர்ப்பை ரசிகர்கள் ஒரு பக்கம் சமாளித்துக் கொண்டுள்ள நிலையில் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து விஜயகாந்த் படு தீவிரமாக ஆலோசனைகளை முடுக்கி விட்டுள்ளார்.
கோவையில் உள்ள ராவுத்தர் தோட்ட இல்லத்தில் நிலை கொண்டுள்ள விஜயகாந்த் அங்கிருந்தபடியே மாநிலம்முழுவதிலும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்துகிறார்.
இந் நிலையில் இன்று சென்னை வரத் திட்டமிட்டுள்ள விஜயகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து பாமகஎதிர்ப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே பாமகவினரின் கடுமையானவிமர்சனங்களை சந்தித்துள்ள ரஜினிகாந்த்தின் ஆதரவு தனக்குத் தேவை என்று ரஜினியிடம் வலியுறுத்தவுள்ளாராம்விஜயகாந்த்.
அத்தோடு பாமகவைக் கண்டித்து சென்னையில், ஒரே மேடையில் உண்ணாவிரதம் இருப்பது குறித்து ரஜினியுடன்,விஜயகாந்த் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிகிறது. இந்த உண்ணாவிரதத் திட்டம் உறுதியானால், மொத்தத்திரையுலகையும் ஒன்று திரட்டவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி திரையுலகில் உள்ள முக்கிய சங்கங்கள் அனைத்தும் விஜயகாந்த்துக்கு ஆதரவாகஉள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, ஜூலை 1ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்ததுக்குச் சொந்தமான ஆண்டாள்அழகர் திருமண மண்டபத்தில் நடக்கவுள்ள ரசிகர் மன்ற முக்கிய ஆலோசனைக்குப் பிறகு விஜயகாந்த் புதியஅரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் எனத் தெரிகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications