நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் அமளி-துமளி
டெல்லி:
மிகவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர்இன்று தொடங்கியது.
ஆனால், கிரிமினல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் என்றுகோரி பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், கூட்டம் தொடங்கியவுடன் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பின் கூடும் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இது.நாளை (6ம் தேதி) ரயில்வே பட்ஜெட் தாக்கலாகிறது. 7ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல்செய்யப்படவுள்ளது.
4 மாநில பா.ஜ.க. ஆதரவு கவர்னர்களை காங்கிரஸ் அரசு பதவி நீக்கம் செய்தது, குற்ற வழக்குகளில்தொடர்புடையவர்களை மத்திய அமைச்சர்களாக்கியது ஆகிய விவகாரங்களை வைத்து இன்றுகாலை கூட்டம் தொடங்கியதும் பா.ஜ.க. உறுப்பினர்கள் பிரச்சனை கிளப்பினர்.
அவையின் மையத்தில் கூடி கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஷ்ட்ரீய ஜனதா தளஅமைச்சர்களை நீக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதற்கு ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதனால் அமளி-துமளி ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டத்தை ஒரு மணி நேரத்துக்கு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஒத்தி வைத்தார்.ஆனால், மீண்டும் அவை துவங்கியதும் மீண்டும் அமளி ஏற்படவே இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதே போல ராஜ்யசபாவிலும் பிரச்சனை ஏற்பட்டதால், அதுவும் நாள் முழுவதும்ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே நாளை தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில்களில் முதல்வகுப்புக்கான கட்டணத்தை உயர்த்த அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் திட்டமிட்டிருப்பதாகத்தெரிகிறது.
அதே போல பொது பட்ஜெட்டில், பிராவிடண்ட் பண்ட் எனப்படும் ஊழியர்களின் சேம நல நிதிக்கும்வரி விதிக்க நிதியமைச்சர் ப.சிதம்பரம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 3ம் வரை நடைபெறவுள்ளது.
கூட்டத் தொடரை அமைதியாக நடத்த உதவுமாறு பா.ஜ.க. மக்களவைத் தலைவர் அத்வானிக்குபிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு பலன்கிடைக்கவில்லை.
இதற்கிடையே நாளை தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டை புறக்கணிக்க பா.ஜ.க.முடிவு செய்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications