பி.இ, எம்பிபிஎஸ்: மகா குழப்பத்தில் மாணவர்கள்
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 7ம் தேதி வரை முதலில் இந்த கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தவறானவை என்று சில மாணவர்கள்தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
அதே போல இம்ப்ரூப்மெண்ட் தேர்வெழுதிய மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேருவதை எதிர்த்துதாக்கலான வழக்கும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
இந்த இரு வழக்குகளும் சேர்த்து வரும் 9ம் தேதி விசாரிக்கப்படவுள்ளன. இதனால் 8ம் தேதி(நாளை) தொடங்க இருந்த கவுன்சிலிங் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இதனால், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த கல்வி ஆண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல்படிப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இரு படிப்புகளுக்குமான கவுன்சிலிங்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் இருபடிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் குழப்பத்திலும்கவலையிலும் ஆழ்ந்து போயுள்ளனர்.
இந்தக் குழப்பங்கள் காரணமாக திட்டமிட்டபடி கல்லூரிகளைத் திறக்க முடியாது என ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.இதனால், செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிப் போகும்.
மருத்துவக் கல்வியைப் பொருத்தவரை செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை முடிந்து விட வேண்டும்.ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் தற்போது உள்ளநிலவரத்தைப் பார்த்தால் அது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
இதேபோல, பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2வது வாரத்தில் அண்ணாபல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கி விடும். சுய நிதிக்கல்லூரிகளில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும்.
இந்த ஆண்டு இந்தக் கல்லூரிகளில் முதல் செமஸ்டர் ஆரம்பிப்பதும் தள்ளிப் போகவுள்ளது.
இதுபோதாதென்று அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் இடம் கிடைக்காத மாணவர்கள், சுய நிதிக்கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் தனியாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று புதிய விதிசேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மேலும் குழம்பிப் போயுள்ளனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications