விரைவில் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்?
டெல்லி - திருச்சி:
காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் வாய்ப்பிருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கர்நாடக அணைகள் மற்றும் மேட்டூரில் உள்ள நீர் மட்டம், சாகுபடி செய்யப்பட்ட பயிர்களின் நிலை, அவற்றிற்குத்தேவையான தண்ணீர், பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான வழிகாட்டுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் தலைமையிலான காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், மாநில தலைமைச்செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்பார்கள். தற்போது, மேட்டூர் அணைக்கு போதுமான தண்ணீர்சென்றுகொண்டிருப்பதாலும்,
நல்ல மழை பெய்திருப்பதாலும் பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெறுவதற்கானவாய்ப்புகள் இல்லை என்று நீர்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
மேட்டூரை திறக்க கோரிக்கை:
இந் நிலையில் மேட்டூர் அணையைத் திறந்து விட வேண்டும் என்று திருச்சி காவிரி பாசனப் பகுதி விவசாயிகள்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த சங்கத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையில்,ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு 42.7 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். இந்தத் தண்ணீரைப் பெறஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் பின்னர் காவிரி பாசனப் பகுதி விவசாயிகளுக்காக மேட்டூர் அணையைத் திறந்து விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications