காஞ்சி: நெசவாளர்கள் மீது போலீஸ் தடியடி தாக்கு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் அரசுக் கூட்டுறவு பட்டு விற்பனைக் கழகங்களின் பெயர்களை வைத்துக் கொண்டு, முறைகேடுகளில்ஈடுபட்டு வரும் தனியார் பட்டு விற்பனை நிலையங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய நெசவாளர்கள் மீதுபோலீஸார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் ஏராளமான பட்டு விற்பனை கழகங்கள் உள்ளன. பல்வேறு அரசு கூட்டுறவுபட்டு விற்பனைக் கழகங்களும் இப் பகுதியில்தான் உள்ளன.
இந் நிலையில் சமீப காலமாக அரசு விற்பனைக் கழகங்களின் பெயர்களையே வைத்துக் கொண்டு பல தனியார்கடைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. இவற்றின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த கடைகளில் போலியான, தரமற்ற பட்டுச் சேலைகள், துணிகள் விற்பதாகவும், இதனால் அரசு கடைகளில்வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைய ஆரம்பித்துள்ளதாகவும் பட்டு நெசவாளர்கள் புகார் கூறுகின்றனர். இதனால்காஞ்சிப் பட்டுக்கு மதிப்பும் குறைந்து தங்களது தொழிலே பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கூறி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று தனியார் கடைகளின் பெயர் பலகைகளை அகற்றும் போராட்டத்தை நடத்தப் போவதாகநெசவாளர்கள் அறிவித்திருந்தனர். இதனால் காந்தி சாலை பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
காலையில் பட்டு நெசவாளர்கள் கூட்டமாக வந்து தனியார் கடைகளின் பெயர்ப் பலகைகளை அகற்ற முயன்றனர்.இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் பயங்கரமாக தடியடி நடத்தினர். இதனால் நெசவாளர்கள் சிதறி ஓடினர்.இந்த தடியடியில் பல நெசவாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இதனால் காந்தி சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications