மருத்துவ கல்லூரிகள்: கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்னி

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக் கல்லூரியில் கூடுதலாக 50இடங்கள் ஒதுக்குமாறு தமிழக அரசு அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பித்தது.

தூத்துக்குடியில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அகிலஇந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படவிருந்த மருத்துவக் கல்லூரிக்கும்அங்கீகாரம் தர இயலாது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சில் இந்த அரசின் மீதுதான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இதற்காகஅங்கே பயிலும் மாணவர்களுக்குத் தண்டனை வழங்கிடக்கூடாது. கூடிய விரைவில் அந்தக் கல்லூரிகளுக்குஅங்கீகாரம் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கான தீவிர முயற்சியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி மேற்கொள்ள வேண்டுமென்றுகேட்டுக் கொள்வதோடு மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+