குழந்தையை கடத்தி நரபலி தந்த பெண் பூசாரி

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

பண்ருட்டி அருகே 3 வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் பூசாரியும் இன்னொருபூசாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூலித் தொழிலாளிகனான வேல்முருகன்- மகாராணி தம்பதியின் மகனான அஜீத் (3 வ.யது) கடந்த 12ம் தேதிகாணாமல் போனான். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் மாயமானான்.

சிறுவனை அந்தப் பகுதியில் குறி சொல்லும் ஒரு பெண் தூக்கிச் சென்றதாக சிலர் கூறினர்.

இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை அஜீத்தின் பெற்றோர் தேடினர். அப்போது அந்தப் பெண்ணின் பெயர்கம்சலா (38) என்றும் விழுப்புரம் அருகே திருநாவலூரில் வசிப்பதும் தெரிய வந்தது.

அவரிடம் சென்று குழந்தையைக் கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னார். இதையடுத்துபோலீசாரிடம் புகார் தரப்பட்டு கம்சலா கைது செய்யப்பட்டார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோதே, விருத்தாசலம் அருகே கிணற்றுக்குள் ஒருசிறுவனின் உடல் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

அந்த உடலை போலீசார் கைப்பற்றினர். முழுவதும் காயங்களுடன் அந்தச் சிறுவனின் உடல் கிடந்தது. அதுஅஜீத்தின் உடல் என்பது உறுதியானது.

கம்சலாவை பெண் போலீசாரை விட்டு அடித்து உதைத்து போலீசார் விசாரித்தபோது, குழந்தை அஜீத்தைக்கடத்தியதையும், அவனை உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்ற பூசாரி நரபலி கொடுத்ததையும்ஒப்புக் கொண்டாள்.

இதையடுத்து அந்த பூசாரியும் கைது செய்யப்பட்டுள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+