வீர செயலில் மரணம்: கருணைத் தொகை உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீர தீர செயலில் ஈடுபட்டு இறக்கும் காவலர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 5 லட்சம்கருணைத் தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

வீரப்பனை தேடி வரும் அதிரடிப்படையினர் பணியின் போது வீரச் செயல்களில் ஈடுபட்டு மரணமடைந்தால்,அவர்களது குடும்பத்துக்கு கருணைத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், வீர தீர செயல்களில் ஈடுபட்டு மரணமடையும் வீரர்களின் வாரிசுகளுக்கு ரூ. 10லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும். வீர தீர செயல்களில் ஈடுபட்டு நிரந்தர ஊனமடையும் வீரர்களுக்கும்இதே அளவிலான தொகை வழங்கப்படும்.

சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் அனைவருக்கும் அவர்களது தரம் கணக்கிடப்படாமல் இந்த கருணைத் தொகைவழங்கப்படும்.

இதுதவிர அதிரடிப்படை வீரர்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. வீரர்களின் தீரச்செயல்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும், அவர்கள் உத்வேகத்துடன் தங்களது பணிகளில் ஈடுபடும் விதத்திலும்இந்த சலுகைகள் அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+