குழந்தைகள் சாவு எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 90 ஆகஉயர்ந்துள்ளது. இதில் 43 பேர் மாணவிகள்.
பள்ளியிலேயே 75 குழந்தைகள் பலியாகிவிட, மேலும் 5 பேர் மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டவுடன் பலியாயினர்.
இந் நிலையில் நேற்றிரவு முழுவதும் மருத்துவமனைகளில் சாவு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. இரவு வரை 87 குழந்தைகள் பலியாயினர். அதிகாலையில் ஒரு குழந்தைபலியானது.
இன்று காலை மேலும் இருவர் பலியானதையடுத்து சாவு எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துவிட்டது.
காயமடைந்த மேலும் 19 மாணவ, மாணவிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்சிலரின் நிலைமையும் மோசமாகவே உள்ளது. அவர்கள் பெரிய மருத்துவமனைகளுக்குமாற்றப்பட்டுள்ளனர்.
மரணமடைந்த 90 குழந்தைகளில் 89 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு பெற்றோரிடம்கொடுக்கப்பட்டுவிட்டன. ஒரு குழந்தையின் அடையாளம் தெரியவிலலை.
இறந்த குழந்தைகளின் இறுதிச் சடங்குகள் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகின்றன.கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களின் இடுகாடுகக்கு உடல்கள் வந்தவண்ணம் உள்ளன.
பல குழந்தைகளுக்கு அருகாமையில் உள்ள தங்களது சொந்த கிராமங்களில் இறுதிச் சடங்கு நடத்தபெற்றோர்கள் விரும்பினர். இதையடுத்து குழந்தைகளின் உடல்களை அருகாமை கிராமங்கள்,ஊர்களுக்கு எடுத்துச் செல்ல வாகனங்கள் தந்து உதவுமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர்டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
நேற்றிலிருந்து இன்று காலை வரை தொடர்ந்து மருத்துமனைகளிலும், பெற்றோர்கள் மத்தியிலும்அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைத்து செய்து கொண்டுள்ளார் கலெக்டர் ராதாகிருஷ்ணன்.
குழந்தைகளை இழந்த பெற்றோரையும், விபத்தில் தப்பி அதிர்ச்சியில் இருக்கும் குழந்தைகளுக்கும்மனரீதியில் ஆறுதல் தருமாறு அதிகாரிகள், மன நல டாக்டர்கள், சமூகப் பணியாளர்களுக்குராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
ஆனாலும், கீழ் மட்ட அதிகாரிகளும், உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் தங்களுக்கு போதியஉதவிகளையும் ஒத்துழைப்பையும் தரவில்லை என குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் பலரும்குற்றம் சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
