காயத்ரி, பிரியதர்ஷினிய காப்பாதுங்க சித்தப்பா
கும்பகோணம்:
தீயில் இருந்து காப்பாற்றப்பட்டபோது பல குழந்தைகளும் தங்களது நண்பர்களையும்காப்பாற்றுமாறு கதறியுள்ளனர். தங்களது உயிர் ஆபத்தில் இருந்த நேரத்திலும் உடன் பயின்றநண்பர்களுக்காக அந்தப் பிஞ்சுகள் குரல் கொடுத்துள்ளன.
தரணிகா என்ற சிறுமி தன் உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் காப்பாற்றப்பட்டு, பள்ளிக்குவெளியே கொண்டு வரப்பட்டுள்ளாள்.
ஆனால் அப்போது கூட, உடன் பயிலும் மாணவிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களைக்காப்பாற்றுமாறு கதறி அழுதபடியே, அடுத்த சில நிமிடங்களில் உயிர் விட்டுள்ளாள்.
பாரதிதாசன் என்பவரின் மகளான தரணிகாவை அவளது சித்தப்பா பள்ளிக்குள் ஓடிச் சென்றுகாப்பாற்றியுள்ளார். அப்போதே அவள் உடல் வெந்து போய்விட்டது.
கையில் அவளை ஏந்திக் கொண்டு சித்தப்பா வெளியில் ஓடி வந்தபோது,
சித்தப்பா, என் கூட படிக்கிற காயத்ரி, பிரியதர்ஷினி, செல்வி இவங்க எல்லாம் தீயிலமாட்டியிருக்காங்க.. அவங்களை காப்பாத்துங்க.. சித்தப்பா என்று கதறியிருக்கிறாள் பிஞ்சுக்குழந்தையான தரணிகா.
இதையடுத்து சரிம்மா காப்பாத்துறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் பள்ளிக்குள் ஓடிச் சென்றுகையில் சிக்கிய குழந்தைகள் சிலரை அள்ளிக் கொண்டு வெளியே வந்திருக்கிறார் சித்தப்பா.
ஆனால், அதற்குள் தரணிகா இறந்துவிட்டாள்.
தீக் காயங்களுடன் தரணிகாவின் சித்தப்பாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தரணிகாவின் தந்தை பாரதிதாசன் கூறுகையில், அந்தச் சூழ்நிலையிலும் உடன் படிக்கும்தோழிகளைக் காப்பாற்றுமாறு சொன்ன என் மகளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
என் மகள் இப்போது உயிருடன் இல்லை. ஆனால், அவளது தைரியம், நட்புணர்வை நினைத்தால்பெருமையாக இருக்கிறது. சில உயிர்களைக் காத்த என் தம்பியையும் நினைத்துப்பெருமைப்படுகிறேன் என்றார் கண்களில் நீர் வழிய.
தம்பியை காப்பத்தலை.. கதறும் சிறுமி:
காயத்ரி என்ற சிறுமி தீயில் இருந்து தப்பி வெளியில் ஓடி வந்து தப்பிவிட்டாள். ஆனால், அவளதுதம்பியான ஜெயப்பிரகாஷ் தீக்குப் பலியாகிவிட்டான்.
இதைச் சொல்லிச் சொல்லி அழும் காயத்ரி, நான் மட்டும் தப்பிச்சு வந்துட்டேன், என் தம்பி பாவம்...நான் அவனை காப்பாத்தலயே என்று அரற்றியவண்ணம் இருக்கிறாள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications