கூரை பள்ளிகளை மூட சேலம் கலெக்டர் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சேலம் :
சேலம் மாவட்டத்தில் உள்ள கூரையால் வேயப்பட்ட அனைத்து பள்ளிகளையும் மூட அந்த மாவட்ட ஆட்சியர்உத்தரவிட்டுள்ளார்.
கும்பகோணத்தில் நடைபெற்ற கொடூர தீ விபத்தில் 90 குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து, சேலம்மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுகுமாறன் தலைமையில் கருத்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 86 பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த 86 பள்ளிகளையும் உடனடியாக மூட மாவட்ட கலெக்டர் சுகுமாறன் உத்தரவிட்டார். அத்துடன்கூரையால் வேயப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications