அறிவாலயம்: அரசு உத்தரவுக்கு தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள பூங்கா தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம்பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்தமனுவில் கூறியிருப்பதாவது:

மொத்தப் பரப்பில் 10 சதவீத நிலத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதியிலிருந்து திமுகஅறக்கட்டளைக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை 1988-ம் ஆண்டு விலக்கு அளித்தது. காலிஇடத்தில் பூங்கா அமைக்க நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதன்படி அண்ணா அறிவாலயத்தின் வடக்குமூலையில் காலி இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு அறிஞர் அண்ணா பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கப்பட்டது.

அண்ணா சாலையை ஓட்டியுள்ள பகுதியில் அறிவாலயத்துக்கு மேற்கே இந்த காலி இடத்தை மாற்றஅனுமதிக்குமாறு பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் 1996ம் ஆண்டு கோரினோம். அக்கோரிக்கை ஏற்கப்பட்டது.அந்த இடத்தில் இப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்காதான் உள்ளது.

ஆனால், ஆளுங்கட்சியினர் கொடுத்த தவறான புகாரின் அடிப்படையில் சட்டவிரோதமாக நடவடிக்கைஎடுத்துள்ளது அதிமுக அரசு. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே திமுக தலைவர்களையும் தொண்டர்களையும்பல்வேறு வழிகளில் துன்புறுத்தி வரும் இந்த அரசு, தற்போது திமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடத்தைகையகப்படுத்த முனைகிறது. எனவே அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில்கூறியிருந்தார் கருணாநிதி.

இந்த மனு இன்று நீதிபதி பாலசுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கருணாநிதி சார்பில் வழக்கறிஞர் ராமசாமி ஆஜராகி, அரசின் உத்தரவு சட்டவிரோதமானது என்றுவாதாடினார். அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், அரசின் உத்தரவு வரைவுஉத்தரவுதான், இறுதி உத்தரவு அல்ல என்றார்.

இதைத் தொடர்ந்து அரசின் உத்தரவு அமல்படுத்தப்படுமானால் அது அமல்படுத்தப்படும் நாளிலிருந்து நான்குவாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+