2 குழந்தைகளுக்கு விரைவில் பிளாஸ்டிக் சர்ஜரி
சென்னை:
கும்பகோணத்தில் தீக்காயமடைந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய்மற்றும் கெளசல்யா ஆகிய குழந்தைகளின் நிலை தற்போது பரவாயில்லை என்றும் விரைவில் அவர்களுக்குபிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் படுகாயமடைந்து உயிர் தப்பிய விஜய் என்றமாணவனும், கெளசல்யா என்ற மாணவியும் (இருவருக்கும் 8 வயது) முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அபாய நிலையில் இருந்த இருவரும்தற்போது தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு குழந்தைகளுக்கும் விரைவில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளதாக டாக்டர்கள்தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications