திரையுலகினர் கும்பகோணம் பயணம்
சென்னை:
நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்று 3 பஸ்களில் கும்பகோணம் புறப்பட்டுச் சென்றனர்.
நடிகர் சங்க கட்டடத்தில் இருந்து அவர்கள் புறப்பட்டனர். அனைவரது சட்டையிலும் தமிழ்பட உலகின் கண்ணீர்அஞ்சலி என்ற வாசகத்துடன் கறுப்பு பேட்ஜ் இருந்தது. இன்று சிவாஜிகணேசன் நினைவு நாள் என்பதால் நடிகர்சங்க வளாகத்தில் அவரது உருவப்படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
நடிகர் சங்க பொதுச் செயலாளர் சரத்குமார் தலைமையில் சிவாஜி உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் 3 பஸ்களில் கும்பகோணத்துக்கு புறப்பட்டனர்.
நடிகர்கள் சரத்குமார், சிபிராஜ், வடிவேல், மயில்சாமி, மன்சூர் அலிகான், ராஜேஷ், ரமேஷ்கண்ணா, குள்ளமணிஆகியோரும். இயக்குநர்கள் பாரதிராஜா, கே.எஸ். ரவிக்குமார், வசந்த், தங்கர்பச்சான், சேரன், ஆர். சுந்தர்ராஜன்,பி. வாசு, வி. சேகர், சசிமோகன், சந்தான பாரதி ஆகியோரும்,
தயாரிப்பாளர்கள் சித்ரா லட்சுமணன், அன்பாலயா பிரபாகரன், இப்ராகிம் ராவுத்தர், அழகப்பன், தேனப்பன்,கே.ராஜன், மோகன் நடராஜன், எம்.ராமநாதன் உட்பட பலர் சென்றனர்.
கும்பகோணத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோரின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறவிருக்கிறார்கள். மேலும்கிருஷ்ணா பள்ளிக்கூடத்துக்குச் சென்று பார்வையிடுகிறார்கள்.
கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்று தீக்காயம் அடைந்த குழந்தைகளுக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.
அதனையடுத்த மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணனை சந்தித்து, திரையுலகினர் திரட்டிய பணத்தை கொடுக்கஉள்ளனர். இன்றிரவே சென்னை திரும்புகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications