பதவி விலக சோரனுக்கு பிரதமர் உத்தரவு
டெல்லி:
கொலை வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்து வரும் மத்தியநிலக்கரித்துறை அமைச்சர் சிபு சோரனை உடனே பதவி விலகுமாறு பிரதமர் மன்மோகன் சிங்உத்தரவிட்டுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன் நடந்த 11 கொலைகள் தொடர்பான வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாதலைவரான சிபு சோரனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தலைமறைவாகிவிட்ட சோரன், கைது உத்தரவை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு திங்கள்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.
இந்த விவகாரத்தால் கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் பெரும் அமளி நிலவியது. இதனால்அவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதங்களே நடத்த முடியவில்லை. கூட்டத் தொடர்முடிவடைந்ததால், நேற்றுடன் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன.
இந் நிலையில் சோரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க் கட்சிகள் தீவிர போராட்டம்நடத்தத் திட்டமிட்டுள்ளன.
இதையடுத்து பதவி விலகுமாறு சோரனுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே பதவி விலகுவது குறித்து சோரன் முடிவுசெய்வார் என அவரது கட்சி அறிவித்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிகார் மாநிலத்தில் அடங்கியிருந்த சிருத்தி என்ற இடத்தில்பதினோரு முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டன. இதில் சோரனுக்கும் தொடர்பிருப்பதாக வழக்குப்பதிவானது. இந்த வழக்கில் இப்போது தான் அவரைக் கைது செய்ய வாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனது செயலாளர் ஒருவரையும் கொலை செய்ததாக சோரன் மீது, சில ஆண்டுளுக்கு முன்,இன்னொரு வழக்கும் சிபிஐயால் பதிவு செய்யப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications