திமுக, அதிமுக பலப்பரிட்சை!
மதுரை:
மதுரை உயர் நீதிமன்றக் கிளை திறப்பு விழாவில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் பெருமளவில்கலந்து கொண்டு, ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
உயர் நீதிமன்றக் கிளை திறப்பையடுத்து மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.போஸ்டர்களுக்குப் பெயர் போன மதுரையில், எங்கெங்கு காணினும் நீதிமன்றத் திறப்பு தொடர்பானவெற்றி விழா போஸ்டர்களே காணப்பட்டன.
நீதிமன்றத்தை இங்கு தொடங்க நாங்கள் தான் காரணம் என்று சொல்லி, திமுகவினரும்,அதிமுகவினரும் போட்டி போட்டு போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.
திமுகவினரின் போஸ்டர்களில் உயர் நீதிமன்றக் கிளை வர காரணமாக இருந்த கருணாநிதிக்கு நன்றிஎன்றும், அதிமுக போஸ்டர்களில், உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படுவதற்கு வழி வகுத்தஜெயலலிதாவுக்கு நன்றி என்று வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
சட்டத்துறை இணையமைச்சராக திமுகவைச் சேர்ந்த வேங்கடபதி இருக்கும் நிலையில், இந்தவிழாவுக்கு ஜெயலலிதாவை மத்திய சட்டத்துறை அழைக்கவில்லை.
ஆனாலும் விழாவில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். அதே போல திமுக தொண்டர்களும்பெருமளவில் குழுமியிருந்தனர். சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி பேசியபோது,திமுகவினர் ஆரவாரத்துடன் கைதட்டினர்.
அதேபோல, மாநில சட்டத்துறை அமைச்சரான ஜெயக்குமார் பேசுகையில், அதிமுகவினர் பலத்தஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பினர். போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்துக் கோஷம்எழிப்பியதோடு அவ்வப்போது இரு தரப்பினரும் முறைத்தும் கொண்டதால், பரபரப்பும் ஏற்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா விழாவுக்கு வரவில்லை என்றாலும் கூட அதிமுகவினர் உற்சாகத்துடன் கலந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமாருக்கு உறுதுணையாக இருந்ததால் அவரும் தனிமை உணர்வைமறந்து புன்னகையுடன் காணப்பட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications