வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி "அட்வைஸ்" !

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நீதிமன்றங்கள் மக்களுக்காகவும், வழக்கு தொடுப்பவர்களுக்காகவும்தான். நீதிபதிகளுக்காகவோஅல்லது வழக்கறிஞர்களின் வசதிக்காகவோ நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோட்டி கூறினார்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த லஹோட்டிபேசுகையில்,

மதுரை பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் பெயர் போன நகரம். நீதி வழங்குவதிலும்மதுரைக்குப் பெரும் வரலாற்றுப் பெருமை உண்டு. எனவே மதுரையில் தொடங்கிவைக்கப்பட்டுள்ள இந்த நீதிமன்றம், நீதியை மட்டுமே தனது தாரக மந்திரமாக கொண்டு செயல்படவேண்டும்.

தலைமை நீதிபதிகளும், நீதிபதிகளும் ஒரு கொள்கையுடன் செயல்பட வேண்டும். அந்தக்கொள்கைகள் நிறைவேற வழக்கறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும். வழக்குகளை பதிவு செய்வதோடுவழக்கறிஞர்களின் வேலை முடிந்து விடாது. நீதிமன்றத்தின் ஒரு அங்கம்தான் அவர்கள்.

நாட்டுப்பற்று, சமுதாயப் பற்று, வழக்கு தொடுப்பவர்களின் நலம் ஆகியவற்றையும் அவர்கள்கருத்தில் கொள்ள வேண்டும். மதுரை கிளை தொடர்பாக வழக்கறிஞர்கள் இரு பிரிவாகப் பிரிந்துநின்றது, குடியரசுத் தலைவர் அறிவிக்கைக்கையை பிரச்சனையாக்கியது ஆகியவை எனக்கு மிகுந்தவருத்தத்தைக் கொடுத்தன என்றார் லஹோட்டி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+