ஓரியண்டலுடன் இணைகிறது குளோபல் டிரஸ்ட்
டெல்லி:
நிதிச் சிக்கலில் தவிக்கும் குளோபல் டிரஸ்ட் வங்கியை பொதுத் துறை வங்கியான ஓரியண்டல்பேங்க் ஆப் காமர்சுடன் இணைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் உள்ள குளோபல் டிரஸ்ட் வங்கியின் செயல்பாட்டை 3 மாதங்களுக்குமுடக்கி வைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அந்த வங்கியில் சேமிப்புக் கணக்குவைத்திருக்கும் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அவர்கள் கணக்கில் இருந்து அதிகபட்சம் ரூ. 10,000 மட்டுமே எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கிஅறிவித்துள்ளது. இதனால் தங்கள் முதலீடு குறித்து கவலையடைந்துள்ள பொது மக்கள் இந்த வங்கிக்கிளைகளை மூன்றாவது நாளாக இன்றும் முற்றுகையிட்டு வருகின்றனர்.
தங்களது கணக்கில் இருந்து ரூ. 10,000யை எடுக்க பொது மக்கள் அலைமோதி வருகின்றனர்.இதனால் இந்த வங்கியின் கிளைகளின் முன் அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள்வரிசையில் நின்றவண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் இந்த வங்கியை தன்னுடன் இணைத்துக் கொள்ளவும், அதை தொடர்ந்து நடத்தவும்ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் முன் வந்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியும் அனுமதிஅளித்துவிட்டதாக, ஓரியண்டல் வங்கியின் தலைவர் பி.டி நரங் இன்று டெல்லியில்செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
இந்த இணைப்பு மிக விரைவில் நடக்கும் என்றும், முதலீட்டாளர்கள் தங்கள் பணம் குறித்துகவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, அடுத்த மூன்று மாதத்துக்கு குளோபல் டிரஸ்ட் வங்கியிலிருந்து அதிகபட்சமாக ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி, பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பைஉயர்த்தவும் தயாராக இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த குளோபல் டிரஸ்ட் வங்கிக்கு நாடுமுழுவதும் 161 கிளைகள் உள்ளன. சுமார் 300 ஏடிஎம்களும் உள்ளன.
கடந்த மார்ச்சில் இந்த வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் ரூ. 6,920 கோடி இருந்தது. இந்த வங்கி ரூ.3,275 கோடியை கடனாக வழங்கியிருந்தது. இதில் ரூ. 1,500 கோடி கடன்கள் வசூலாகவில்லை.அதே நேரத்தில் இந்த ஆண்டு வங்கியின் சேமிப்பு கணக்குகளில் இருந்த பணமும் குறைந்து போனது.
இந் நிலையில் பங்குச் சந்தையில் இந்த வங்கி முதலீடு செய்திருந்த ரூ. 121 கோடி மதிப்பிலானபங்குகளின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இதனால் வங்கி ரூ. 272 கோடியளவுக்கு நஷ்டத்தில் இயங்கியது. ஆனால், ரூ. 400 கோடி லாபத்தில்இயங்குவதாக இந்த வங்கி ரிசர்வ் வங்கியிடம் கணக்குக் காட்டியது.
இதையடுத்து விசாரணை நடத்திய ரிசர்வ் வங்கி, கடந்த சனிக்கிழமை குளோபல் டிரஸ்ட் வங்கியைமுடக்கியது.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், குளோபல் டிரஸ்ட்வங்கி முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டே அந்த வங்கி முடக்கப்பட்டது என்றார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications