சிவகாசி: பட்டாசு ஆலையில் தீவிபத்து; ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
சிவகாசி அருகே அய்யம்பட்டி என்ற கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர்பலியானார்.
அய்யம்பட்டியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் பட்டாசுகளுக்கான மருந்துப் பொருட்களை அடுக்கும்பணியில் சில ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென்று பட்டாசு வெடித்து அங்கு தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் வேகமாக வெளியேறினர். ஆனால் 2 பேர் மட்டும் சிக்கிக் கொண்டனர்.
இதில் ஒரு ஊழியர் இறந்து விட்டார். இன்னொருவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவர் சிவகாசி அரசுமருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.
தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து நிலைமைய கட்டுக்குள் கொண்டு வந்தனர்.












Click it and Unblock the Notifications