கருணாநிதி மீது சிபிஐயிடம் அதிமுக புகார்
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடியில் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள், முக்கிய புள்ளிகளின்தொடர்புகள் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என சிபிஐயிடம் திமுக மனு கொடுத்துள்ளநிலையில், வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்க திமுக ஆட்சியில் ரூ. 20 கோடி தரப்பட்டவிவகாரத்தில் கருணாநிதிக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டி சிபிஐயிடம் அதிமுக மனுகொடுத்துள்ளது.
இந்த ரூ. 20 கோடியை முத்திரைத் தாள் மோசடி மன்னன் தெல்கியிடம் இருந்தே திரட்டியுள்ளனர்என்றும் அதிமுக புகார் கூறியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக ஆளுநர் ராம்மோகன் ராவிடம் எதிர்க் கட்சிகள் புகார்மனு அளித்ததையடுத்து, அதிமுகவும் மனுக்கள் தந்து நெருக்கடி தரும் வேலைகளைத்தொடங்கியுள்ளது. இதற்காக தனது ராஜ்சபா எம்.பிக்கள் 12 பேரையும் அவசரமாக டெல்லிக்குஅனுப்பினார் முதல்வர் ஜெயலலிதா.
இந் நிலையில், இன்று டெல்லியில் சிபிஐ இயக்குனரை சந்தித்த அதிமுக எம்.பிக்கள் ஒரு மனுவைஅளித்தனர். அதில்,
ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு ரூ. 20 கோடி தரப்பட்டதாக அம் மாநில மூத்த போலீஸ் அதிகாரிசங்க்ராம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரதுஉத்தரவுப்படி, போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்ஜியிடமிருந்து ரூ. 20 கோடி பணம்பெறப்பட்டு, நடிகர் ரஜினிகாந்த்தின் மேலாளர் மூலமாக வீரப்பனுக்கு வழங்கப்பட்டது.
முன்னாள் கர்நாடக டிஜிபி தினகரும் தான் எழுதிய புத்தகத்தில் கருணாநிதியின் வீட்டில் வைத்து வீரப்பனுக்குத் தரவேண்டிய பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ராஜ்குமார் மீட்புக்குப் பிறகு அதிரடிப்படையினர் நடத்திய சோதனைகளில் வீரப்பன் கூட்டாளிகளிடமிருந்து ஏராளமான பணம் பறிமுதல்செய்யப்பட்டது.
கருணாநிதி மற்றும் ரஜினியின் மேனேஜரிடம் தரப்பட்ட பணத்தை நக்கீரன் கோபால் பலமுறைகாட்டுக்கு எடுத்துச் சென்று கோபாலிடம் ஒப்படைத்துள்ளார். இந்த விவகாரத்தில் கருணாநிதிக்கும்தொடர்பிருப்பதாக சந்தேகிக்கிறோம்.
வீரப்பனுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு நக்கீரன் கோபாலின் வாழ்க்கை வசதிகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எஸ்.எம்.கிருஷ்ணா, மல்லிகார்ஜுன கார்கே, கருணாநிதி ஆகியோரின் பெயர்கள் இந்த விஷயத்தில்அடிபடுவதாலும், போலி முத்திரைத் தாள் மன்னன் அப்துல் கரீம் தெல்ஜியின் பணம் இதில் புழங்கியுள்ளதாலும்இந்த விஷயம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
தேவைப்பட்டால், கருணாநிதி, கோபால், ரஜினியின் மேலாளர் ஆகியோர் மீது புது வழக்குத் தொடர்ந்து விசாரிக்கவேண்டும். சிபிஐ முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றுஅதிமுகவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நேற்று காலை திமுக தலைமையிலான குழு ஆளுநர் ராம்மோகன் ராவை சந்தித்து அதிமுக ஆட்சி மீதுபுகார் கொடுத்துள்ள நிலையில், அதிமுக எம்.பிக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்து தமிழகநிலைமை குறித்து விளக்க மனு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications