பணக்கார யோகம் பெறும் மிதுன ராசி.. சூரியன் குருவால் கொட்டப் போகும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

mithunam-rasi-palan-let-us-look-at-the-benefits-in-store-for-those-born-under-the-mithunam-sign-thi

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 27 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு படபடப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வாராஹி அம்மன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். வாராஹி மந்திரங்களை தினந்தோறும் கேட்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கோபமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த அமைப்புகள் தீரும். மற்றவர்களிடம் வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முன்னேற்றம்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். உத்தியோகத்தில் ஏற்றம், வியாபாரத்தில் ஏற்றம், தொழிலில் ஏற்றம் என முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். சந்தோஷமாக இருப்பீர்கள்.

பணவரவு

சைபர் குற்றங்கள், போனினால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளால் பிரச்சனை வரக்கூடும் என்பதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. கால் பாதம் தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு ஆரோக்கியப் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளது. பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. மனதிற்குள் ஏராளமான நல்ல எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.

அரசு பதவி

3 ஆம் இடத்தில் சந்திரன் கேது சுக்கிரன் ஜூலை 17,18 ஆம் தேதிகளில் அவசியமே இல்லாத கோபம், குழப்பம், மன வருத்தம் இருந்து கொண்டே இருக்கும். எல்லா விஷயங்களிலும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும் அதனைத் தவிர்ப்பது நல்லது. அதீத குழப்பத்தை தவிர்க்க வேண்டும். பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. ராசி லக்னத்தில் சூரியன் குரு இணைவு இருப்பதால் அரசு பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

வழிபாடு

சந்தோஷம் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு பயணம், சொத்துகள் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. சந்தோஷம் ரீதியாக 85 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 75 சதவீதமும் நன்மைகள் உண்டாகும். திருச்செந்தூர் முருகன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+