டெல்லியில் முகாமிட்ட தவெக அமைச்சர்கள்! மத்திய அமைச்சர்களுடன் அடுத்தடுத்து சந்திப்பு.. ஆலோசித்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சர்களை தவெக அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சந்தித்து பேசினர். தங்கள் துறை சார்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக் அமைச்சர்கள், தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதி மற்றும் சாலை திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நாளை புஸ்சி ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர்.

தமிழக முதல்வர் விஜய் நேற்று டெல்லி சென்ற நிலையில் அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோரும் டெல்லி சென்றனர். முதல்வர் விஜய் சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு நேற்றே சென்னை திரும்பிவிட்ட நிலையில், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், புஸ்சி ஆனந்த் ஆகியோர் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர்.

Adhav Arjuna

கல்வி நிதியை வழங்க கோரிக்கை

டெல்லியில் இன்று பிற்பகல் மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியை அமைச்சர் ராஜ்மோகன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி 5 ஆயிரம் கோடிக்கு மேல் நிலுவையில் உள்ள நிலையில், ராஜ்மோகன் நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தினார்.

அதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது:- ஒன்றிய அரசின் மாண்புமிகு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை இன்று டெல்லியில் சந்தித்து, தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு கோரி விரிவான ஆவணத்தை வழங்கினோம்.

சென்னை தூத்துக்குடி விரைவுச்சாலை

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, சென்னை நுழைவுச் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஆய்வுகள் மற்றும் முன்னெடுப்புகளை மேற்கொள்வது குறித்துக் கலந்துரையாடினோம்.

திருச்சி - கரூர் - கோயம்புத்தூர் 230 கி.மீ. பசுமை வழி நெடுஞ்சாலைக்கு விரைந்து ஒப்புதல், சென்னை - கோயம்புத்தூர் - தூத்துக்குடி தொழில் வழித்தட விரைவுச் சாலை மற்றும் புதுச்சேரி - கிருஷ்ணகிரி (திண்டிவனம் - திருவண்ணாமலை) நான்குவழிப் பணிகள் மற்றும் வாகனச் சுரங்கப்பாதை உள்ளிட்ட சாலைப் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துதல், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) நிறுவுதல் திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். நிலையான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பான சாலைப் போக்குவரத்து என்கிற குறிக்கோளை முன்வைத்து கலந்துரையாடினோம்.' என்று பதிவிட்டுள்ளார்.

டிகே சிவக்குமார் சொல்வதை ஏற்கக் கூடாது

இதற்கு மத்தியில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்தும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் டெல்லியில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை சந்தித்து பேச உள்ளனர். அப்போது கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமார், மேகதாது விஷயத்தில் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர். டிகே சிவக்குமார் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்றும் அமைச்சர்கள் வலியுறுத்த உள்ளனர். இந்த சந்திப்பிற்காக தமிழக நீர்வளத்துறையின் முக்கிய அதிகாரிகளும் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+