ஒரே ஒரு வீடியோ தான்.. பறிபோன தவெக நகர செயலாளர் பதவி.. லட்சத்தை லபக்கிய பிரகாஷ்! பரபர ஆக்‌ஷன்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் தமிழக வெற்றி கழகத்தில் பதவி வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதோடு, பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் நடத்தி வந்த ஷோரூமில் ரகளை செய்த தவெக நகர செயலாளர் பிரகாஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இருசக்கர வாகன ஷோரூம் ஒன்றை அப்பகுதியில் நடத்தி வருகிறார். இவரது மனைவி தான் திவ்யா. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மகாராஜன் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதோடு பல்வேறு நிகழ்ச்சியையும் நடத்தி வந்திருக்கிறார்.

TVK Tamilaga Vettri Kazhagam Vijay

இதற்கிடையே அக்கட்சியின் வேடப்பட்டி நகர செயலாளரான பிரகாஷ் அவரது ஷோரூமுக்கு சென்று இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கி இருக்கிறார். அப்போது ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் கட்சியின் இளைஞர் அணி பொறுப்பை வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு பதவி வாங்கித் தரவில்லை என சொல்லப்படுகிறது.

இதை அடுத்து மகாராஜன் பணத்தை திரும்ப கேட்டும் பிரகாஷ் உரிய பதில் அளிக்கவில்லை. இதற்கு இடையே மகாராஜனின் ஷோரூமில் தான் வாங்கிய இருசக்கர வாகனத்தை பதிவு செய்வதற்காக அதனை அங்கேயே ஒப்படைத்து இருக்கிறார் பிரகாஷ். அப்போது தான் கொடுத்த பணத்தை திரும்பிக் கொடுத்தால் தான் வாகனத்தை தருவேன் என மகாராஜன் சொல்லி இருக்கிறார்.

இதனால் இது தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 14ஆம் தேதி பிரகாஷ் மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சிலர் மகராஜனின் ஷோரூமுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாத நிலையில் அவரது மனைவி திவ்யா மட்டுமே கடையில் இருந்துள்ளார். அப்போது இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஷோரூம் இருந்த இருசக்கர வாகனங்களை பிரகாஷ் தள்ளிவிட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த திவ்யா பிரகாஷை ஷோரூமில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நடந்த சம்பவங்களை திவ்யா செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளான நிலையில் பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாகவும், கட்சியின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி, அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக தவெக கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+