அப்போ கன்ஃபார்ம் தான் போலயே.. 'நாளைய முதல்வர்' தனுஷ்! பட்டையைக் கிளப்பும் ரசிகர்கள்! என்னாச்சு?
தஞ்சாவூர்: அரசியல் கட்சியே தொடங்காத நடிகர் தனுஷுக்கு 'நாளைய முதல்வர்' பட்டம் அளித்துள்ளனர் அவரது ரசிகள். நடிகர் தனுஷ் நடுத்துள்ள ஓ.ர்ம் திரைப்படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் ரசிகர்கள் எழுதியுள்ள சுவர் விளம்பரங்களால் தான் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்துள்ள 'ஓம்' திரைப்படம் வரும் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அவரை 'நாளைய முதல்வர்' எனக் குறிப்பிட்டு மயிலாடுதுறை மாவட்ட ரசிகர்கள் எழுதியுள்ள சுவர் விளம்பரங்கள் தமிழக அரசியல் மற்றும் திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தைக் கலைக்காமல், அதனை மறுசீரமைத்து 'தனுஷ் நற்பணி இயக்கம்' எனப் பெயர் மாற்றியுள்ளார். மேலும், தொகுதி வாரியாக ரசிகர்களை ஒருங்கிணைப்பது, கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மகளிர் ரசிகர்களைச் சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கியது என அவரது சமீபத்திய செயல்பாடுகள் அரசியல் வருகைக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில், 'ஓம்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கடையூர், பொறையார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத் தலைமை நற்பணி இயக்கச் செயலாளர் ஏ.சி.ஆர். சிவா தலைமையில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களில், நிர்வாகிகளின் பெயர்களுடன் "நாளைய முதல்வர் தனுஷ் நடிக்கும் ஓம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் எழுச்சிக்குப் பிறகு, அடுத்ததாக தனுஷும் அரசியலில் குதிக்கப் போவதாகப் பேச்சுகள் அடிபடுகின்றன. ஒருபுறம் வரிசையாகப் புதிய படங்களில் ஒப்பந்தமாகி சினிமாவில் தீவிரம் காட்டி வரும் தனுஷை, மறுபுறம் அவரது ரசிகர்கள் 'நாளைய முதல்வர்' என முன்னிறுத்தி வருவது, இது வெறும் படத்திற்கான விளம்பர யுக்தியா அல்லது எதிர்கால அரசியல் வருகைக்கான முன்னோட்டமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.




Click it and Unblock the Notifications
