திமுக ஆட்சிக்கு வரவே வராது.. இன்னும் 25 வருஷத்துக்கு தவெக ஆட்சி தான்! அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!
மதுரை: திமுக ஆட்சி என்பது கனவு, அது நடக்காது.. இன்னும் 25 ஆண்டுகள் தமிழக வெற்றிக்கழக கூட்டணி மந்திரி சபை தான் நீடிக்கும் எனவும், நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்ப்போம் என மேலூரில் உயர் கல்வித் துறை அமைச்சர் விசுவநாதன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் 4 கிராமங்களில் 3.42 கோடி மதிப்பிலான கூடுதல் வகுப்பறை கட்டங்களை உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்திக்த அவர், இந்திய அரசு பிரதமர் முன்னிலையில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் சிவகுமார் சொன்னதை கடுமையாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக கண்டித்து இருக்கிறார். காங்கிரஸ் அமைச்சர்களான நானும் ராஜேஷ்குமார் இருவரும் வன்மையாக கண்டிக்கிறோம்.
எங்கள் மக்கள் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த மாநில முதலமைச்சராக இருந்தாலும், தமிழக மக்களின் குரலாக முதல்வருக்கு காங்கிரஸ் பேரியக்கமும், காங்கிரஸ் அமைச்சர்களும் தோளோடு தோள் கொடுக்கும். காவிரி நதிநீரை பங்கு செய்ய 177 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை மதிக்காத அரசு, அதையும் மதிக்காமல் மேகதாது அணை கட்டுவேன் என ஆணவமாக பேசுகிற பேச்சு உகந்ததல்ல.
இதில் பிரதமர் நரேந்திர மோடி இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு ஆதரவு கரம் நீட்டுவதாக பொய் பேசுகிறார். கர்நாடகவிற்கு ஆதரவு தருவதாக பொய் பேசுகிறார். ஆனால் அவர் கர்நாடகாவிற்கும் ஆதரவு இல்லை தமிழ்நாட்டிற்கும் ஆதரவு தரப்போவதில்லை. உச்சநீதிமன்றம் மத்திய அரசை கையில் வைத்துக் கொண்டு காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பை வழங்காமல் இழுத்தடிப்பது என்பது இந்திய நாடாளுமன்ற சட்டத்திற்கு விரோதமானது. ஜனநாயகப் பண்புகளுக்கும் எதிரானது.
இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடிய நடவடிக்கையாக நாட்டின் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை எதிர்க்கிறோம். கர்நாடக முதல்வர் எந்த அளவுக்கு மேகதாது அணையை கட்ட ஆதரிக்கிறாரோ அதைவிட வீரியமாக தமிழக காங்கிரஸ் கமிட்டியும் தமிழக அமைச்சரவையும் கடுமையாக எதிர்ப்போம். இது தொடர்பாக சட்டமன்றத்தில் இன்னும் வேகமாக, உத்வேகத்துடன் தமிழக மக்களுக்கு ஆதரவு குரல் கொடுப்போம்.
விரைவில் திமுக ஆட்சி வரும் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார், வைகோ அவர்கள் அற்புதமான பதிலை கொடுத்திருக்கிறார். Instant Answer . தமிழக அரசியலில் வைகோ போன்ற மிக உயர்ந்த அரசியல் நெறி சார்ந்த அரசியல் தலைவர் ஆவார். அவர் உடனே பதில் சொல்லி இருக்கிறார். அவர் திமுக ஆட்சி நடக்காது, நடக்கவும் வாய்ப்பில்லை, நடப்பதற்கு துளி கூட இடமில்லை.
தமிழக வெற்றி கழகம் தான் தொடர்ந்து தொடர்ந்து, தொடர்ந்து..கூட்டணி மந்திரி சபை இன்னும் இருபது, 25 ஆண்டுகளுக்கு தொடரும். திமுக ஆட்சி அமைப்போம் என்பது கனவு, கனவு.. அது நடக்காது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்ப்போம். மேலூர் பகுதி ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலூர் ஒரு போக பகுதி விவசாயிகள் கால்நடைகள் சிரமம் அடைவதாக, தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் கோரிக்கை நியாயமானது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசினேன். இன்று சென்னைக்குப் அவர்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள். 15 நாட்கள் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டி கோரிக்கை வைப்பதற்காக எழுதுகிறார்கள். பொதுப்பணித்துறை செயலாளரை நாளை நான் சந்திக்கிறேன்" என்றார்.




Click it and Unblock the Notifications
