வழக்கறிஞர்கள் போட்டி உண்ணாவிரதம்
சென்னை:
மதுரை உயர் நீதிமன்றக் கிளை தொடர்பான பிரச்சனைகள் குறித்து தீர்வு காண மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டஒருங்கிணைப்புக் குழுவை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அமைத்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு அதிக மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்தது, ரிட் மனுக்களை விசாரிக்க அதிகாரம்வழங்கியது ஆகியவற்றை எதிர்த்தும், இதற்காக தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை கண்டித்தும், அவரைஇடமாற்றம் செய்யக் கோரியும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் உள்ளிட்டபோராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உண்ணாவிரதம் இருந்து வரும் ஒரு வழக்கறிஞர் இன்று மயங்கி விழுந்தார்.
இந் நிலையில், பிரச்சனைக்குத் தீர்வு காண ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை சங்கத் தலைவர் பிரபாகரன்அமைத்துள்ளார். இதில் மூத்த வழக்கறிஞர்களான தமிழ்மணி, சாந்தகுமாரி, நளினி சிதம்பரம், மாசிலாமணி, காந்திஉள்ளிட்ட 23 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, போராட்டங்களைக் கைவிட்டுவிட்டு நீதிமன்றப் பணிகளில் ஈடுபடுமாறு வழக்கறிஞர்களுக்குமத்திய சட்டத்துறை இணையமைச்சர் வேங்கடபதி கோரிக்கை விடுத்துள்ளார். பிரச்சனை குறித்து என்னுடன் பேசமுன் வந்தால், என்னால் இயன்றதைச் செய்வேன் என்று கூறியுள்ளார்.
கருணாநிதி கோரிக்கை:
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தாமதப்படுத்தப்படும் நீதி என்பதுதடுக்கப்பட்ட நீதி என்பதை நன்கு உணர்ந்துள்ள வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணைகள் தாமதப்படுவதைகருத்தில் கொண்டு இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு இப்போராட்டத்தைக் கைவிட்டு விட்டு வேறு உரிய வழிகளில் போராட அவர்கள் முன் வர வேண்டும் என்றுகோரியுள்ளார்.
இதற்கிடையே தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு ஆதரவாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்களும்போட்டி உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications