ஹோதா திடீர் நீக்கம்: மர்மம் என்கிறது திமுக
சென்னை:
முன்னாள் உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் போலிமுத்திரைத் தாள் பிரச்சினை தொடர்பாக சிபிஐயிடம் திமுக அளித்த புகாரில் உண்மை உள்ளது என்பதுதெளிவாகியுள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது மர்மமாக உள்ளதாகவும்கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர்,
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் ஹோதாவுக்குத் தொடர்பு உள்ளதாகவும், அதனால்தான் இந்த வழக்கைசிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டாம் என முதல்வரை அவர் வலியுறுத்தியதாகவும் சிபிஐயிடம் திமுக எம்.பி.செ.குப்புசாமி புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை முதல்வர் ஜெயலலிதா மறுத்தார். மேலும், புகார் கொடுத்த திமுக வழக்குத் தொடரும்படியும்சிபிஐயிடம் அதிமுகவினர் மனு கொடுத்தனர். ஆனால், அதே புகாரைக் காரணம் காட்டி இப்போது ஹோதாவைதற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார் ஜெயலலிதா. இதிலிருந்து திமுகவின் புகாரில் உண்மை இருப்பதுதெளிவாகியுள்ளது.
ஹோதா மீதான புகார் குறித்து இத்தனை நாட்களாக தமிழக அரசு ஏன் மறைத்தது என்பதையும், இப்போதுமர்மமான முறையில் திடீரென பதவி நீக்கம் செய்தது ஏன் என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும். அதிமுகஆட்சியில் எல்லாமே மர்மமாகத் தான் நடக்கிறது.
தமிழக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து ஆளுநரிடம் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் புகார்கொடுத்ததற்குப் போட்டியாகவே அதிமுக எம்.பிக்கள் சிபிஐயிடம் மனு கொடுத்துள்ளனர். அதில் வேறு எந்தவிஷேசமும் இல்லை என்றார் கருணாநிதி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications