கும்பகோணம்: குவியும் இரங்கல் கடிதங்கள்
தஞ்சாவூர்:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளுக்கும் இரங்கல் தெரிவித்து தஞ்சாவூர்மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் இருந்துஆயிரக்கணக்கான கடிதங்கள் குவிந்து வருகின்றன.
குடந்தை கோர விபத்து நடந்த இத்தனை நாட்களாகியும் அந்த சோக வடு இன்னும் மக்கள் மனதிலும், பிற பள்ளிமாணவ, மாணவியர் மனதிலும் மறையவில்லை.
தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணனும் அந்த வேதனையில் இருந்து வெளிவரவில்லை. அவரதுஅலுவலகத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான இரங்கல் கடிதங்கள் வந்தவண்ணம் உள்ளன. இதில்பெரும்பாலானவை பள்ளி மாணவர்கள் அனுப்பியுள்ள கடிதங்களாகும். இதுவரை ஆயிரக்கணக்கில் கடிதங்கள்குவிந்துள்ளன.
திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவர்கள் 450 அடி நீள இரங்கல் கடிதத்தை ஆட்சித் தலைவர்ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதேபோல, மும்பையைச் சேர்ந்த ஜே.ஜே. அகாடமி பள்ளி மாணவர்கள் ஓவியங்கள் மூலம் தங்களது கண்ணீர்அஞ்சலியைத் தெவித்துள்ளனர். புனேவைச் சேர்ந்த எச்.எச்.சி.பி. பள்ளி மாணவர்களும் வேதனைகளைஉள்ளடக்கிய கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பள்ளியின் மாணவர்கள் 1,300 இரங்கல் கடிதங்களை புத்தக வடிவில்அனுப்பி வைத்துள்ளனர். இந்தக் கடிதங்கள் அனைத்தும் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகவளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications